என் நெற்றியில் முத்தமிட வேண்டாம்
புருவம் வருடி உறங்க வைக்க வேண்டாம்
முதுகில் படர்ந்து காதைக் கடிக்க வேண்டாம்
பாதங்களை மடியிலேந்தி சொடக்கெடுக்க வேண்டாம்
ஆப்பிள் நறுக்கித்தரவேண்டாம்
தேநீர் தந்து புன்னகைக்க வேண்டாம்
என்னிடம் பேசவேண்டுமென்பதில்லை
என்னை நீ கவனிக்க வேண்டுமென்பதும்
எனக்கொரு பொருட்டல
நீ இயல்பாக இருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதும்
விரல் கோர்த்து முகம் சாய்க்கும் கதகதப்பும்
நீ மூச்சுவிடும் மெல்லிசையும் போதுமெனக்கு
ஆயிரமாயிரமிருந்தாலும் உன் அருகாமை போல் வருமா?
-மணிபாரதி துறையூர்