பள்ளிக்கூட காதலிகள்
கல்லூரி காதலிகள்
அலுவலகக் காதலிகள்
திரையில் பார்த்த காதலிகள்
ஒவ்வொருவருக்கும் திருமணமானது
ஏதேனும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட கணத்தில்
சபிக்கப்பட்ட ஒரு தினத்தில்
பட்டியலிட்டுப் பார்த்தபோது உரைத்தது
என் எல்லா காதலிகளுக்கும் திருமணமாகியிருந்தது
திருமணமான பெண்களை
இனி காதலித்தல் தர்மமில்லை.
எனினும்
எனக்குப் பிடித்த நிறத்தில் உடையணிந்து
உடன் நடந்து
அதே பள்ளிகளிலும்
கல்லூரி காரிடாரிலும்
அலுவலகக் காஃபிடீரியாவிலும்
உலவிக்கொண்டுதானிருக்கிறார்கள்
என் பழைய காதலிகள் இன்னும்
என் பழைய காதலிகள் இன்னும்
நிழற்படங்களிலும் நினைவுகளிலும்
-மணிபாரதி துறையூர்