Saturday, December 5, 2009

முதுகு வலி ஏன் வருகிறது? Why do we get back pain?

Why do so many people have low back pain?

Low back pain is a very common problem, because the lower back carries most of your weight. Four out of five adults have back pain at some time in their life.

What are the most common causes of low back pain?

Here are the most common causes of low back pain:
Muscle strains and spasms: Improper or excess lifting or twisting may cause strains or spasms of the muscles that support your back.
Osteoarthritis: As you age, the cushioning discs between the bones in your spine become dry and hard, and the spine stiffens, leading to pain and discomfort.
Sciatica: Compression of a nerve (such as you might get from a disc that slips out of its spot between your backbones) and inflammation of a nerve cause pain to travel from your back down into a leg. The pictures on the right show a disc that has slipped out of the right place and presses on a nerve.

How is low back pain treated?

* Most of the time back pain gets better in two to four weeks with what doctors call "conservative therapy" (Physical therapy)
* Over-the-counter pain relievers
* The application of ice in the first 24 hours and heat on the following days
* A gentle & gradual return to normal activities is encouraged. Strict bed rest doesn't help and can actually slow the healing process.


Note about Over-the-counter pain relievers:

Over-the-counter pain relievers include nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs) such as ibuprofen, naproxen sodium, and aspirin.
Aspirin can cause stomach problems and should be taken with food. If you are taking blood thinners, you should ask your doctor if it's safe to take any medicine that contains aspirin.
Acetaminophen is less likely than aspirin and other NSAIDs to bother your stomach.

What warning signs should I look for with low back pain?

* Fever
* Past use of steroids, like prednisone
* Losing weight without trying to
* Pain that gets worse or doesn't get better taking rest
* A history of injury to your back
* Bladder or bowel problems
* Weakness in your legs
* Severe pain
* A history of cancer

If you have back pain plus any of the above mentioned conditions, you should consult your doctor or your physitherapist.

This handout provides a general overview on this topic and may not apply to everyone. (Don't Get Afraid) To get more information on this subject, talk to your family doctor or physiotherapist.

Regards.. :-)

D.Mani BPT., MIAP
Consultant Physiotherapist

நீங்களும் கணினியும் You & Computer


To promote safety and comfort, follow these principles whenever you use your computer. கணினியில் வேலை செய்யும்போது கவனிக்கவேண்டியவை:

Adjust (அமரும் முறையை சரிசெய்தல்)

•Adjust your body position and your work equipment.
கணினிக்கு எதிரில் அமரும்போது உடல் அமைப்பு நேராக இருப்பதுபோல் அமரவேண்டும்.
• There is no one "right" position. Find your comfort zone, as described in this Guide, and when working at your computer, frequently adjust within this zone.
இப்படித்தான் என்றில்லை, உங்களுக்கு வசதியாக ஆனால் உடல் நேராக இருப்பது போல் அமர்ந்துகொள்ளுங்கள்.

Move (நடக்க வேண்டும்)

• Vary your tasks so that you can move around; avoid sitting in one posture all day.
ஒரே இடத்தில் நாள் முழுவதும் அமர்ந்து வேலை செய்வதை தவிர்த்து, உங்கள் வேலையே சிறு சிறு மாற்றங்களுடன் செய்யுங்கள்.
• Perform tasks that require walking.
நடந்து சென்று செய்வது போன்ற வேலைகளை நீங்களே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

Relax (ஓய்வு தேவை)

• Build positive relationships at work and home. Relax and strive to reduce sources of stress.
வேலை செய்யும் இடத்தில் எல்லோருடனும் சகஜமாக பழகுங்கள். மன அழுத்தத்தை குறைக்கும் முறைகளை கையாளுங்கள்.
• Stay aware of physical tension such as clenching your muscles and shrugging your shoulders.
இறுக்கமாக அமர்ந்திருக்காதீர்கள்; சதைகளை தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள்.
• Take frequent, short breaks.
கொஞ்சம் ஓய்வு தேவை.

Listen (கவனம் தேவை)

• Listen to your body.
உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்.
• Pay attention to any tension, discomfort, or pain you may feel, and take immediate action to relieve it.
பதட்டம், சங்கடம், வலி போன்ற உபாதைகளை உடனே கவனித்து சரிசெய்ய வேண்டும்.

Remember (நினைவில் கொள்ளுங்கள்)

• Exercise regularly and maintain general fitness; this will help your body withstand the rigors of sedentary work.
சீரான முறையான உடற்பயிற்சி உட்கார்ந்தபடியே செய்யும் வேலைகளை செய்வதற்கு உடலை தயார்படுத்தும்.
• Respect any medical conditions you may have or other known health factors. Adjust your work habits to accommodate them.
உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். வேலைமுறைகளுக்கு ஒத்துவருவது போல் உங்கள் ஆரோக்கியம் இருக்கவேண்டும்.

Breathe deeply (மூச்சுப்பயிற்சி)
Breathe fresh air deeply and regularly. The intense mental concentration that may accompany computer use may tend to cause breath-holding or shallow breathing.
மேலோட்டமாக மூச்சு விடாமல் நன்றாக உள்ளிருந்து மூச்சை இழுத்து விடுங்கள். கணினியில் வேலை செய்ய கவனம் தேவை. சுகாதாரமான காற்றும் முறையான மூச்சுப்பயிற்சியும் இதற்கு உதவும்.

படைப்பாற்றல் Vs பொருளாதாரம்


கவிஞர்கள் எழுத்தாளர்கள் - மென்மையான மனம் கொண்டவர்கள். மற்றவர்கள் வெறும் செய்தியாக மட்டுமே பார்க்கும் ஒரு சம்பவத்தை, மனிதாபிமானத்தோடு பதிவு செய்வது கவிஞர்களும் எழுத்தாளர்களும்தான்.

செய்திகளையும் சம்பவங்களையும் கவிதையாகவும், கதையாகவும் படைக்கும் பிரம்மாக்கள் தற்கொலை செய்துகொள்வதை கேள்விப்படும்போது மனம் கனத்துப்போகிறது.

எல்லோரையும் புரிந்துகொள்ளும் இவர்கள் ஏன் புரிந்துகொள்ளப்படவில்லை?
நூறுகோடி மக்கள்தொகை கொண்ட இந்த சமூகத்தில் அவரை நேசிக்க, அறுதல் சொல்ல, பிரச்சனையை பகிர்ந்துகொள்ள ஒருவர்கூடவா இல்லாமல் போய்விட்டார்?

கைபேசியில் குறைந்தது 500 எண்களையாவது வைத்திருப்போமே, ஒருவரும் நினைவுக்கு வரவில்லையா? அப்படியானால் அத்தனை உறவுகளும் நண்பர்களும் பொய்யானவர்களா ?

அப்படியெல்லாம் இல்லை.

இலக்கிய கூட்டங்களுக்கு செல்லும்போது நான் கவனிப்பதுண்டு. பெரும்பாலான படைப்பாளிகள் (கவிஞர்கள், எழுத்தாளர்கள்) புன்னகைப்பதில்லை, சிரிப்பதில்லை, சகஜமாக மற்றவருடன் பேசுவதில்லை. அருகில் அமர்ந்து இருப்பவரை பார்த்து புன்னகைப்பதும் இல்லை. இறுக்கமானவர்களாகவே தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றனர்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

* ஒருவருடைய மனப்பான்மை ( Attitude)

* தனித்தன்மை (Personality of an Individual)

* முக்கியமாக மனஅழுத்தம் (Depression)

கலை இலக்கியம் சார்ந்த ஈடுபாடு 99% நண்பர்களாலும் குடும்ப உறுப்பினர்களாலும் அங்கீகரிக்கப் படுவதில்லை அல்லது மதிக்கப்படுவதில்லை.
பொருள் ஈட்டும் திறமையைப் பொறுத்தே சமூகத்தில் ஒருவன் மதிக்கப்படுகிறான். தன் வயதொத்த நண்பர்களும் உறவினர்களும் நன்றாக சம்பாதிப்பதைப் பார்த்து, தான் மற்றவர்களை போல் சம்பாதிக்காமல் தவறு செய்கிறோமோ என்கிற குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது.

கலை இலக்கிய மனம் 9 to 5 வேலையை விரும்புவதில்லை. (அனால் அந்த வேலையில் தானே சம்பாதிக்க முடிகிறது???)

இன்னொருவரின் (அப்பா/அண்ணன்/ தம்பி/ மனைவி ) வருமானத்தில் வாழவேண்டியிருப்பது, பிள்ளைகளும் அப்பா மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது, எல்லாமுமாய் சேர்ந்து ஒரு படைப்பாளியை சந்தோஷம் குறைந்தவனாக, இயல்பாக மற்றவர்களுடன் பழகத்தெரியாதவனாக மாற்றிவிடுகிறது. மனஅழுத்தம் அதிகமாகி, இறுக்கமானவர்களாகவே மாறிப்போகிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன தீர்வு? இரண்டே இரண்டு மந்திரங்கள்.

* நிதர்சன வாழ்கையை உணர்வது

(Knowing & Understanding Practical life).

பொருளாதாரம் சார்ந்துதான் வாழ வேண்டும். அதிலும் இன்றைய சூழலில் சம்பாதிக்காமல் ஒருவர் வாழ்வது நிச்சயம் முடியாது. பத்திரிக்கை தொலைக்காட்சி சார்ந்த வேலைகளில் சேர்வது ஒருவகையில் கலை இலக்கிய ஆர்வத்திற்கும் பொருளாதார தேவைக்கும் வடிகாலாய் இருக்கும். பொருளாதார தேவை பூர்த்தியாவது பெரும்பாலான மன அழுத்தங்களுக்கு சரியான தீர்வு.

* நம்மை நேசிப்பவர்களை புரிந்துகொள்வது.

(Knowing & Understanding Relatives and Friends)

நாம் எவ்வளவுதான் அறிவு ஜீவியாய் இருந்தாலும் மற்றவர்களை சரியாக புரிதுகொள்ள முடியவில்லை என்றால் நமக்கு மனமுதிர்ச்சி இல்லை என்பதுதான் உண்மை. சிந்தனைவாதியாக இருந்தாலும் தானும் மற்றவரைபோல் ஒரு சராசரி மகனாகவும், கணவனாகவும், அப்பாவாகவும் தான் இந்த சமூகத்தால் பார்க்கப்படுவோம் என்பதை உணரவேண்டும் . குறைந்தபட்ச சராசரி கடமைகளை செய்யவேண்டும்.

உறவினர்களை அவர்களது நிலையிலிருந்து புரிந்துகொள்ளாததுதான் அனைத்து குடும்பப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை. அப்பா, அம்மா, அண்ணன்-தம்பி, மனைவி, குழந்தைகளிடம் சரியான புரிதல் இல்லை எனும்போது நண்பர்கள் வீட்டுக்கு வந்து செல்வது குறைகிறது. மன உளைச்சல் அதிகமாகிறது.

இலக்கியவாதி என்றாலும் மற்ற துறையைச் சேர்ந்த நண்பர்களும் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை, அவர்களது சூழல் சார்ந்து அணுக கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் உலகில் புத்திசாலி என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . ஒருவரது சுயமரியாதையை குறைப்பதை போல் பேசாதீர்கள். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

ஒருவரின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களோ நண்பர்களோ எப்போதாவது சொல்லும் குறைகளை வெளிப்படுத்தும் கோபங்களை மனதில் வைத்துக்கொள்ள கூடாது. மனதை லேசாக்குங்கள்.

தாழ்வுமனப்பான்மை, சுயபச்சாதபம் வேண்டாம். கொஞ்சமாக உடற்பயிற்சி நடைபயிற்சி செய்யுங்கள்.

மனமும் உடலும் நாம் சொன்னால் கேட்கும். சொல்கிறோமா என்பதுதான் கேள்வி

Sunday, September 6, 2009

நீர்த்திவலைகளாய்..


உன் பயணச்சுமையை பகிர்ந்துகொள்ள
உடன் வரும் வாய்ப்பில்லை.
நேரம் போவது தெரியாமல்
Sweet Nothings பேச...
அயர்ச்சிக்கு ஆதரவாய்
மெத்தென தோள்கொடுக்க...
உன் அருகில் நான் இல்லை.
பயணக்களைப்பில்
உன் தாகம் தீர்க்கும்
கடைசி மடக்கு தண்ணீரில்...
நீர்த்திவலைகளாய்
நிச்சயம் நானிருப்பேன்.
சீக்கிரம் வந்து தொலை.


-மணிபாரதி துறையூர்

Wednesday, March 18, 2009

நிகழ்தகவு


கடைசிநாள்
"முகவரி வேண்டும்" என்றாள்.
ஆட்டோகிராப் புத்தகத்தில்
எழுதிக்கொண்டே கேட்டேன்.
"எதற்கு எதெல்லாம்...
கடிதம் எழுதுவாயா நீ ..?"
"நிச்சயம் எழுதுவேன்"
உறுதியாகச் சொன்னாள்.
புன்னகைத்துப் புத்தகம் கொடுத்தேன்.

ஒன்று இரண்டு பல கடிதங்கள்
இரண்டு நான்கு பல வருடங்கள்
பதிலே இல்லை.
எல்லாம் வேஷம்;
சொன்னதெல்லாம் பொய்.

வெகுநாள் கழித்து
வேறோர் ஊரில் எதிர்பட்டாள்.
"ஐயோ..! நம்பவே முடியலை...
எவ்வளவு சந்தோஷமாயிருக்கு...
உன்னைப் பார்க்க" என்றாள்."
போதும் நிறுத்து
பொய் வார்த்தை பேசாதே..!"
வெடித்தேன்.

"உன் கோபம் புரிகிறது
மன்னித்துவிடு.
உன்னைப்போல்
முற்போக்கு குடும்பமில்லை எனது.
ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லி
அவர்கள் முன்னால்
கடிதம் எழுதுவதும் சாத்தியமில்லை.
புத்தகங்களில் உன் கவிதை படிக்கிறேன்.
தொலைபேசியில் குரல் கேட்கிறேன்.
கடிதங்களால் தன்னம்பிக்கை கொள்கிறேன்.
எப்போதும் போல்
எழுது- பேசு-
என்னை மறந்துடாதே"
சொல்லி நடந்து புள்ளியானாள் தோழி.

ஒன்று இரண்டு பல கடிதங்கள்
இரண்டு நான்கு பல வருடங்கள்
பதிலே இல்லை.
என்றேனும் எழுதுவாள்...
ஆண்-பெண் நட்பு புரிந்த
அண்ணனோ தம்பியோ
கணவனோ மகனோ
பேரனோ வாய்க்கும் நாளில்.

-துறையூர் மணி
ஓவியம்: Phyllis Rash Hughes


எனது "நிகழ்தகவு" கவிதை 03-08-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது.

Saturday, March 7, 2009

தொக்கி நிற்கும் கேள்விகள்


* சோகங்களின் சுமை கூடும்போது
புல்லாங்குழலிசை கேட்பாயா
பூச்செடிகளுக்கு நீருற்றுவாயா?

* கடிதத்தில் சில இடங்கள்
கலங்கியிருந்தனவே அழுதாயா?

* வடுக்களில் சூடுபட்டால்
வலிக்குமா முன்போல்?

* எப்போது பழகப்போகிறது மனம்
ஆளில்லாத வீட்டின் பூட்டை
இழுத்துப் பார்க்காமல் திரும்புவதற்கு.

* இப்போதும்
திரும்பிப் பார்க்கிறாயா
என் பெயர் சொல்லி
பிறர் அழைத்தால்...

* கண்ணில் படாமல்
இருந்திருக்கக் கூடாதா
புயலில் இறந்தோர் பட்டியலில்
உன் சாயல் புகைப்படம்.

* நீ வரும் நாளில்
எப்போதும் போல்
வாசல் திறந்திருக்கும்
நான் இருப்பேனா
எதிர்கொண்டு வரவேற்க...

* நேற்று பெய்த மழையில்
நனைந்தாயா?
எனக்கு ஜலதோஷம்.

* சொல்ல மறந்த
பிறந்தநாள் வாழ்த்தைவிட
சுமையானதா...
வெளிசொல்லாத நேசம்?

* அஞ்சல் நிலையத்திலும்
தெரிவிக்க வில்லையா?
உன் முகவரி மாற்றத்தை...

* பிளாஸ்டிக் பூவைச் சுற்றிய
வண்ணத்துப் பூச்சி
உன் அன்புக்கு ஏங்கிய நான்
அதிகம் ஏமாந்தது யார்?

* குமுறல்களை
அதிகம் பகிர்ந்துகொள்வது
தலையணையா
கவிதைகளா..?

* எடைக்குப் போயிருக்குமோ..?
பரண் மேல் கிடந்த
பழைய புத்தகத்தோடு
ஸ்டிக்கர் பொட்டும் ரோஜாவும்...

-துறையூர் மணி


எனது "தொக்கி நிற்கும் கேள்விகள்" கவிதை
23-03-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது

அம்மா

படிப்புக்காக நானும்
என் செலவுக்கு
பணம் சேர்க்க நீயும்
தூரங்களில் சுவாசிக்கிறோம்.

நாகரீகத்தில் செழிக்கும்
என் நல்ல நண்பன்
வாரம் இருமுறை
தன் வீட்டுக்கு கடிதம் எழுதுகிறான்.
அன்னையர் தினத்தன்றும்
அம்மாவின் பிறந்தநாளன்றும்
அழகிய வாழ்த்து அட்டைகள் அனுப்பி
தன் அன்பைச் சொல்கிறான்.

இதையெல்லாம் பார்க்கும்போது
எனக்கும் ஆசைதான்
தேடித்தேடி தேர்வுசெய்து
வாழ்த்து அட்டைகள் அனுப்பவும்
நெக்குருகி நான் எழுதும்
கடிதங்களையும் கவிதைகளையும்
நீயே படித்து நெகிழ்ந்துணர்வதைப் பார்க்கவும்.

அனால் அம்மா...
கஷ்டப்பட மட்டுமே கற்றிருக்கும் நீ
கொஞ்சம் கல்வியும் கற்றிருக்கக் கூடாதா?

-துறையூர் மணி


எனது அம்மா கவிதை www.ambalam.com June 2001 -ல் பிரசுரமானது.

Thursday, March 5, 2009

இதயத்துடிப்பும் பாதச்சுவடும்


இளவேனிற் காலத்தில்
திரும்பி வருவதாய்
சொல்லிப்போனாய்
ஊதாப்பூக்களோடு
உனக்காக காத்திருந்தேன்
இலையுதிர்காலம் தொட்டே

இலைகள் உதிர்ந்து
இளவேனிலும் வந்தது
நீ மட்டும் வரவே இல்லை
இதயம் கனத்துக் காத்திருந்தேன்
இன்னும் பல பருவங்கள்
அதன் பிறகும் நீ வரவே இல்லை

பிறகுக்கும் பிறகு வந்த
மற்றொரு இலையுதிர் காலத்தில்
இலைகளோடு சேர்ந்து
நானும் உதிர்ந்து போனேன்
கடைசி விருப்பமாக
நீ வரும் வழியிலேயே
என்னை விதைத்திருக்கிறார்கள்

நீ உணராமல் போன
என் இதயத்துடிப்பைப் போல் அல்ல
உன் பாதச்சுவடுகள் கூட
எனக்குப்புரியும்
என்றைகாவது நீ
என்னைத் தேடி வருவதை
சருகுகள் சொல்லும்போது
நான் விழித்துக்கொள்வேன்
அது ஒரு இளவேனிற்காலமாய் இருக்கும்.

-துறையூர் மணி


குறிப்பு:எனது இந்த கவிதை JULY 1998 "குமுதம் ஸ்பெஷல்" மாத இதழில் திரு.மாலன் அவர்கள் ஆசிரியராக பணியாற்றியபோது பிரசுரமானது.

இடைவெளி


மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு
கொட்டாவி விட்டபடி
"அதெல்லாம் ஒரு காலம்" என்று
அப்பா சொல்லும்போது அதன்
அர்த்தம் புரியாது எனக்கு

இன்று சாரலின் சலசலப்பில்
நிலைப்படியில் நின்று
முகத்தை நீட்டி
மூக்கை மட்டும் நனையவிட்டு
கதகதப்புக்காக கட்டிய கை அவிழ்த்து
ஒரு கை நீட்ட
உள்ளங்கையில் விழுந்த சிறு துளியின் சிலிர்ப்பு
உடலெல்லாம் பரவி உச்சந்தலை வருட
வானவில்லாய் வளைந்த நினைவுகளில்
கத்திக்கப்பல் விட்டதும்
கண்ணாமூச்சி விளையாட்டும்
கண்முன் நிழலாடும்
"அதெல்லாம் ஒரு காலம்"


-துறையூர் மணி

எனது "இடைவெளி" கவிதை 27-04-2000 மாலைமதி இதழில் பிரசுரமானது