Saturday, December 5, 2009

படைப்பாற்றல் Vs பொருளாதாரம்


கவிஞர்கள் எழுத்தாளர்கள் - மென்மையான மனம் கொண்டவர்கள். மற்றவர்கள் வெறும் செய்தியாக மட்டுமே பார்க்கும் ஒரு சம்பவத்தை, மனிதாபிமானத்தோடு பதிவு செய்வது கவிஞர்களும் எழுத்தாளர்களும்தான்.

செய்திகளையும் சம்பவங்களையும் கவிதையாகவும், கதையாகவும் படைக்கும் பிரம்மாக்கள் தற்கொலை செய்துகொள்வதை கேள்விப்படும்போது மனம் கனத்துப்போகிறது.

எல்லோரையும் புரிந்துகொள்ளும் இவர்கள் ஏன் புரிந்துகொள்ளப்படவில்லை?
நூறுகோடி மக்கள்தொகை கொண்ட இந்த சமூகத்தில் அவரை நேசிக்க, அறுதல் சொல்ல, பிரச்சனையை பகிர்ந்துகொள்ள ஒருவர்கூடவா இல்லாமல் போய்விட்டார்?

கைபேசியில் குறைந்தது 500 எண்களையாவது வைத்திருப்போமே, ஒருவரும் நினைவுக்கு வரவில்லையா? அப்படியானால் அத்தனை உறவுகளும் நண்பர்களும் பொய்யானவர்களா ?

அப்படியெல்லாம் இல்லை.

இலக்கிய கூட்டங்களுக்கு செல்லும்போது நான் கவனிப்பதுண்டு. பெரும்பாலான படைப்பாளிகள் (கவிஞர்கள், எழுத்தாளர்கள்) புன்னகைப்பதில்லை, சிரிப்பதில்லை, சகஜமாக மற்றவருடன் பேசுவதில்லை. அருகில் அமர்ந்து இருப்பவரை பார்த்து புன்னகைப்பதும் இல்லை. இறுக்கமானவர்களாகவே தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றனர்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

* ஒருவருடைய மனப்பான்மை ( Attitude)

* தனித்தன்மை (Personality of an Individual)

* முக்கியமாக மனஅழுத்தம் (Depression)

கலை இலக்கியம் சார்ந்த ஈடுபாடு 99% நண்பர்களாலும் குடும்ப உறுப்பினர்களாலும் அங்கீகரிக்கப் படுவதில்லை அல்லது மதிக்கப்படுவதில்லை.
பொருள் ஈட்டும் திறமையைப் பொறுத்தே சமூகத்தில் ஒருவன் மதிக்கப்படுகிறான். தன் வயதொத்த நண்பர்களும் உறவினர்களும் நன்றாக சம்பாதிப்பதைப் பார்த்து, தான் மற்றவர்களை போல் சம்பாதிக்காமல் தவறு செய்கிறோமோ என்கிற குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது.

கலை இலக்கிய மனம் 9 to 5 வேலையை விரும்புவதில்லை. (அனால் அந்த வேலையில் தானே சம்பாதிக்க முடிகிறது???)

இன்னொருவரின் (அப்பா/அண்ணன்/ தம்பி/ மனைவி ) வருமானத்தில் வாழவேண்டியிருப்பது, பிள்ளைகளும் அப்பா மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது, எல்லாமுமாய் சேர்ந்து ஒரு படைப்பாளியை சந்தோஷம் குறைந்தவனாக, இயல்பாக மற்றவர்களுடன் பழகத்தெரியாதவனாக மாற்றிவிடுகிறது. மனஅழுத்தம் அதிகமாகி, இறுக்கமானவர்களாகவே மாறிப்போகிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன தீர்வு? இரண்டே இரண்டு மந்திரங்கள்.

* நிதர்சன வாழ்கையை உணர்வது

(Knowing & Understanding Practical life).

பொருளாதாரம் சார்ந்துதான் வாழ வேண்டும். அதிலும் இன்றைய சூழலில் சம்பாதிக்காமல் ஒருவர் வாழ்வது நிச்சயம் முடியாது. பத்திரிக்கை தொலைக்காட்சி சார்ந்த வேலைகளில் சேர்வது ஒருவகையில் கலை இலக்கிய ஆர்வத்திற்கும் பொருளாதார தேவைக்கும் வடிகாலாய் இருக்கும். பொருளாதார தேவை பூர்த்தியாவது பெரும்பாலான மன அழுத்தங்களுக்கு சரியான தீர்வு.

* நம்மை நேசிப்பவர்களை புரிந்துகொள்வது.

(Knowing & Understanding Relatives and Friends)

நாம் எவ்வளவுதான் அறிவு ஜீவியாய் இருந்தாலும் மற்றவர்களை சரியாக புரிதுகொள்ள முடியவில்லை என்றால் நமக்கு மனமுதிர்ச்சி இல்லை என்பதுதான் உண்மை. சிந்தனைவாதியாக இருந்தாலும் தானும் மற்றவரைபோல் ஒரு சராசரி மகனாகவும், கணவனாகவும், அப்பாவாகவும் தான் இந்த சமூகத்தால் பார்க்கப்படுவோம் என்பதை உணரவேண்டும் . குறைந்தபட்ச சராசரி கடமைகளை செய்யவேண்டும்.

உறவினர்களை அவர்களது நிலையிலிருந்து புரிந்துகொள்ளாததுதான் அனைத்து குடும்பப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை. அப்பா, அம்மா, அண்ணன்-தம்பி, மனைவி, குழந்தைகளிடம் சரியான புரிதல் இல்லை எனும்போது நண்பர்கள் வீட்டுக்கு வந்து செல்வது குறைகிறது. மன உளைச்சல் அதிகமாகிறது.

இலக்கியவாதி என்றாலும் மற்ற துறையைச் சேர்ந்த நண்பர்களும் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை, அவர்களது சூழல் சார்ந்து அணுக கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் உலகில் புத்திசாலி என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . ஒருவரது சுயமரியாதையை குறைப்பதை போல் பேசாதீர்கள். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

ஒருவரின் மனநிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களோ நண்பர்களோ எப்போதாவது சொல்லும் குறைகளை வெளிப்படுத்தும் கோபங்களை மனதில் வைத்துக்கொள்ள கூடாது. மனதை லேசாக்குங்கள்.

தாழ்வுமனப்பான்மை, சுயபச்சாதபம் வேண்டாம். கொஞ்சமாக உடற்பயிற்சி நடைபயிற்சி செய்யுங்கள்.

மனமும் உடலும் நாம் சொன்னால் கேட்கும். சொல்கிறோமா என்பதுதான் கேள்வி

4 comments:

  1. padaipaligal patriya ungal karuthu miga sariye. naan sandhikka nerntha migasila ilakkiyavadhigalidam, neengal sonna gunangalai kandirukiren. they r crazy.

    mani,
    edharkkum udane react seyium ungal attitude enai viyakkavaikiradhu. dont change this attitude. this will keep u going. thnks for ur comment.

    ReplyDelete
  2. மிக்க நன்றி. மிக நுணுக்கமாக கவனிக்கும் உங்களையும் நான் என்றென்றும் மனதில் வைத்திருப்பேன். படைப்பாளிகள் மிக மிக மென்மையானவர்கள். எல்லோரையும் போல் அவர்களை நாம் அணுகக்கூடாது. அவர்களை மதித்து பேச வேண்டும், இது அவர்களுக்கு நாம் கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை மற்றும் கடமை.

    ReplyDelete