Sunday, August 21, 2011

வாசனை

தலைவலித் தைல வாசனை வரும்போதெல்லாம்
அக்காவின் நினைவு
பல்லி கெக்கரிக்கும் போதெல்லாம்
அம்மாவின் நினைவு
ஆறிய பாலைக் குடிக்க நேரும்போதெல்லாம்
அப்பாவின் நினைவு
ரயில்களைப் பார்க்கும்போதெல்லாம்
அண்ணனின் நினைவு
வாழ்த்து அட்டை வாங்கும்போதெல்லாம்
தோழிகள் நினைவு
மேன்ஷன்களைப் பார்க்கும்போதெல்லாம்
நண்பர்கள் நினைவு

கால ஓட்டத்தில்
இடம் மாறி, திசைமாறி
தூர தூர தேசங்களில்
குப்பை கொட்டிக்கொண்டிருந்தாலும்
துரத்தும் நினைவுகளில்
மறக்கவே முடியாத மனிதர்கள் 
வந்து வந்து போகிறார்கள்

உள்ளீடற்ற எதிர்மறை நிஜங்களைவிட
எப்போதும் மேலானவை
திரும்பக் கிடைக்காத நேர்மறை நினைவுகளின்
வாசனை

-மணிபாரதி துறையூர்

6 comments:

  1. இது தான்யா வாழ்க்கை. இந்த நினைவு இல்லைன்னா, அது நம்மளைத் துரத்தலைன்னா, அங்க என்ன இருக்கும்?
    நான் ரசித்த அருமையான கவிதை.

    உங்கள் கவித்துவ எண்ணங்களுக்கு முதலிடம் கொடுங்கள். நிச்சயம் ஓர் உயர்ந்த நடிகனாகப் பரிணமிப்பீர்கள்.

    அன்புடன்
    பெ.சந்திர போஸ்
    சென்னை

    ReplyDelete
  2. உங்கள் விமர்சனத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டாக்டர் சந்திர போஸ். :-)

    ReplyDelete
  3. Very effective and touching kavithai ,Mani.
    well done.

    ReplyDelete
  4. // உள்ளீடற்ற எதிர்மறை நிஜங்களைவிட
    எப்போதும் மேலானவை
    திரும்பக் கிடைக்காத நேர்மறை நினைவுகளின்
    வாசனை // முற்றிலும் உண்மையான, இதயத்தை கணக்க வைக்கின்ற வரிகள்.

    ReplyDelete