Saturday, March 1, 2014

மெல்லிசை

என் நெற்றியில் முத்தமிட வேண்டாம்
புருவம் வருடி உறங்க வைக்க வேண்டாம்
முதுகில் படர்ந்து காதைக் கடிக்க வேண்டாம்
பாதங்களை மடியிலேந்தி சொடக்கெடுக்க வேண்டாம்
ஆப்பிள் நறுக்கித்தரவேண்டாம்
தேநீர் தந்து புன்னகைக்க வேண்டாம்
என்னிடம் பேசவேண்டுமென்பதில்லை
என்னை  நீ கவனிக்க வேண்டுமென்பதும்
எனக்கொரு பொருட்டல
நீ இயல்பாக இருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதும்
விரல் கோர்த்து முகம் சாய்க்கும் கதகதப்பும்
நீ மூச்சுவிடும் மெல்லிசையும் போதுமெனக்கு
ஆயிரமாயிரமிருந்தாலும் உன் அருகாமை போல் வருமா?

-மணிபாரதி துறையூர்

2 comments:

  1. கவிதை அழகாயிருந்தாலும்
    அதன் கருவில் களங்கம் இருப்பது போல் உள்ளது...

    நீ உன் உணர்ச்சிகளை பூட்டி வைத்து விட்டு
    எனக்கு ஒரு சிலையாய் இருந்தால் போதும்
    உன் செய்கைகள் எனக்கு முக்கியம் இல்லை
    உன் அருகாமையைத் தவிர....

    நான் தவறென்றால் மன்னிக்கவும்....

    ReplyDelete
  2. // நீ இயல்பாய் இருப்பதை// என்றால் நீ நீயாக இருப்பதை என்று பொருள். இதையெல்லாம் நீ எனக்கு செய்கிறாயே, எனினும்
    நீ அருகில் இருப்பதே எனக்கு போதும் என்பது அவன் விருப்பம்.

    ReplyDelete